போலி ஆவணம் தயாரித்து 6 கிரவுண்ட் இடத்தை அபகரிக்க முயன்றவர் கைது
வேளச்சேரி: சென்னை வேளச்சேரி செல்வா நகரில் வசிப்பவர் அஸ்வின் குமார். இவருக்கு சொந்தமாக வேளச்சேரியில் 6 கிரவுன்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்ய சென்னை பட் ரோடு துளசிங்கபுரம் கருமாரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த நில புரோக்கர் தமிழ்மணி (50), வேளச்சேரி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்றார். அவர் கொடுத்த ஆவணங்களை பத்திரப் பதிவு அதிகாரி பார்த்து போலி என்று கண்டுபிடித்தார். இதையடுத்து, வேளச்சேரி காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துராஜ் போலீசாருடன் வந்து விசாரணை நடத்தினார். போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து புரோக்கர் தமிழ்மணியை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/11/2025 1:54:06 PM
-Updated 11/11/2025 1:46:26 PM
-Updated 11/11/2025 12:57:53 PM
-Updated 11/11/2025 12:54:57 PM
-Updated 11/11/2025 12:50:29 PM
-Updated 11/11/2025 12:26:02 PM
-Updated 11/11/2025 12:25:41 PM
-Updated 11/11/2025 12:17:46 PM
-Updated 11/11/2025 12:14:43 PM
-Updated 11/11/2025 11:21:52 AM
-Updated 11/11/2025 11:13:24 AM
-Updated 11/11/2025 11:09:46 AM
-Updated 11/11/2025 11:09:21 AM
-Updated 11/10/2025 2:00:29 PM
-Updated 11/10/2025 2:00:11 PM