அடையாறு, வியாசர்பாடியில் மூதாட்டிகளிடம் 11 பவுன் பறிப்பு : பைக் ஆசாமிகளுக்கு வலை
வேளச்சேரி: கோயிலுக்கு சென்று திரும்பிய மூதாட்டியிடம் செயின் பறித்த நபரை போலீசார் தேடுகின்றனர். சென்னை அடையாறு தனலட்சுமி அவென்யூவை சேர்ந்தவர் தர்மாம்பாள் (68). இன்று காலை அங்குள்ள கோயிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது பைக்கில் வந்த வாலிபர், தர்மாம்பாள் அணிந்திருந்த 8 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பிவிட்டார். புகாரின்பேரில், அடையாறு போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறித்து தப்பிய நபரை தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்:
வியாசர்பாடி பிவி காலனி 23வது தெருவை சேர்ந்தவர் கல்யாணி (55). எம்கேபி நகர் 7வது குறுக்கு தெருவில் வீட்டு வேலை செய்து வருகிறார். நேற்று மாலை வேலை முடிந்து கல்யாணி வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த பைக் ஆசாமிகள் 2 பேர் ஆள்நடமாட்டம் குறைந்த பகுதியில் அவர் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பினர். புகாரின்பேரில் எம்கேபி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/11/2025 1:54:06 PM
-Updated 11/11/2025 1:46:26 PM
-Updated 11/11/2025 12:57:53 PM
-Updated 11/11/2025 12:54:57 PM
-Updated 11/11/2025 12:50:29 PM
-Updated 11/11/2025 12:26:02 PM
-Updated 11/11/2025 12:25:41 PM
-Updated 11/11/2025 12:17:46 PM
-Updated 11/11/2025 12:14:43 PM
-Updated 11/11/2025 11:21:52 AM
-Updated 11/11/2025 11:13:24 AM
-Updated 11/11/2025 11:09:46 AM
-Updated 11/11/2025 11:09:21 AM
-Updated 11/10/2025 2:00:29 PM
-Updated 11/10/2025 2:00:11 PM