அவனியாபுரம்: சினிமா படப்பிடிப்பில் நடந்த தகராறில் இயக்குனருக்கு அடி, உதை விழுந்தது. மதுரை பெருங்குடி அருகே வலையங்குளம் பகுதியில் ‘காளையரும் கன்னியரும்’ என்ற சினிமா படப்பிடிப்பு நடந்து வருகிறது. இயக்குனர் ராசு மதுரவன் இயக்கும் இந்த படத்தில் புதுமுகங்கள் நடிக்கின்றனர். படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து துணை நடிகர் மற்றும் நடிகைகளை இயக்குனர் அழைத்து வந்திருந்தார். மதுரை மற்றும் சுற்றுப்பகுதிகளில் நடக்கும் சினிமா படப்பிடிப்புகளுக்கு துணை நடிகர்களை, அய்யர்பங்களா பகுதியைச் சேர்ந்த கண்ணன் அனுப்புவது வழக்கமாம். சென்னையில் இருந்து துணை நடிகர்கள் வந்திருக்கும் தகவலறிந்து கண்ணன் தரப்பினர், படப்பிடிப்புக் குழுவை நேற்றிரவு சந்தித்து விசாரித்திருக்கின்றனர். அப்போது தகராறு ஏற்பட்டது. இதில் ராசு மதுரவனுக்கு சரமாரி அடி விழுந்தது. கண்ணன் தரப்பினர் தன்னை தாக்கி காயப்படுத்தியதாக இயக்குனர் ராசு மதுரவன் கொடுத்த புகாரின் பேரில் பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/11/2025 1:54:06 PM
-Updated 11/11/2025 1:46:26 PM
-Updated 11/11/2025 12:57:53 PM
-Updated 11/11/2025 12:54:57 PM
-Updated 11/11/2025 12:50:29 PM
-Updated 11/11/2025 12:26:02 PM
-Updated 11/11/2025 12:25:41 PM
-Updated 11/11/2025 12:17:46 PM
-Updated 11/11/2025 12:14:43 PM
-Updated 11/11/2025 11:21:52 AM
-Updated 11/11/2025 11:13:24 AM
-Updated 11/11/2025 11:09:46 AM
-Updated 11/11/2025 11:09:21 AM
-Updated 11/10/2025 2:00:29 PM
-Updated 11/10/2025 2:00:11 PM