பள்ளத்தை பார்த்து திடீர் பிரேக் : பைக்கில் இருந்து விழுந்த பெண் சாவு
புழல்: ரோட்டில் உள்ள பெரிய பள்ளத்தை பார்த்ததும் திடீர் பிரேக் போட்டு நிறுத்தியதால் பின்சீட்டில் இருந்த பெண் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். சென்னை புழல் அடுத்த லட்சுமிபுரம் ரமணி நகரில் வசித்தவர் பிரமிளா (56). இவரது மகன் ஜெசி (15). நேற்று முன்தினம் மகனுடன் பைக்கில் வில்லிவாக்கம்-லட்சுமிபுரம் சாலையில் சென்றுகொண்டு இருந்தார். மழை காரணமாக ரோட்டில் உள்ள பெரிய பள்ளத்தை பார்த்ததும் பைக்கை நிறுத்தினார். இதில் பின் சீட்டில் இருந்த பிரமிளா ரோட்டில் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்றிரவு பிரமிளா இறந்தார். இந்த விபத்து தொடர்பாக, மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/5/2025 11:03:46 AM
-Updated 11/5/2025 11:03:37 AM
-Updated 11/5/2025 11:03:27 AM
-Updated 11/5/2025 11:03:17 AM
-Updated 11/3/2025 1:26:04 PM
-Updated 11/3/2025 12:36:31 PM
-Updated 11/3/2025 11:04:58 AM
-Updated 11/3/2025 11:04:42 AM
-Updated 11/3/2025 11:04:29 AM
-Updated 11/3/2025 11:04:19 AM
-Updated 11/3/2025 10:54:00 AM
-Updated 11/3/2025 10:53:50 AM
-Updated 11/3/2025 10:53:40 AM
-Updated 11/3/2025 10:53:31 AM
-Updated 11/2/2025 3:51:52 PM