தாய்மாமாவை மணக்க மகள் மறுப்பு : தீக்குளித்த தாய் பரிதாப பலி
காஞ்சிபுரம்: தாய்மாமனை திருமணம் செய்ய மகள் மறுத்ததால் மனமுடைந்த தாய், தீக்குளித்து இறந்தார். காஞ்சிபுரம் அருகே ஊவேரி சத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வி (40). மகளை தனது தம்பிக்கு திருமணம் செய்துவைக்க செல்வி முடிவு செய்தார். ஆனால், இதற்கு மகள் சம்மதிக்கவில்லை. பலமுறை வற்புறுத்தியும் திருமணத்துக்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த செல்வி, கடந்த 20ம் தேதி உடலில் தீ வைத்துக் கொண்டார். அவரை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு செல்வி பரிதாபமாக இறந்தார். புகாரின்பேரில், காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். செல்வி உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/5/2025 11:03:46 AM
-Updated 11/5/2025 11:03:37 AM
-Updated 11/5/2025 11:03:27 AM
-Updated 11/5/2025 11:03:17 AM
-Updated 11/3/2025 1:26:04 PM
-Updated 11/3/2025 12:36:41 PM
-Updated 11/3/2025 12:36:31 PM
-Updated 11/3/2025 11:04:58 AM
-Updated 11/3/2025 11:04:29 AM
-Updated 11/3/2025 11:04:19 AM
-Updated 11/3/2025 10:54:00 AM
-Updated 11/3/2025 10:53:50 AM
-Updated 11/3/2025 10:53:40 AM
-Updated 11/3/2025 10:53:31 AM
-Updated 11/2/2025 3:51:52 PM