வேளச்சேரி: சென்னை மேற்கு வியாசர்பாடி 16வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன் (28). இவர், நேற்று மாலை இந்திராநகரில் உள்ள வங்கிக்கு பணம் கட்ட சென்றார். நேரம் ஆகிவிட்டதால் பணம் கட்ட முடியவில்லை. இதனால் பணத்தை சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு தனது காருக்கு வந்தார். காரை ஸ்டார்ட் செய்தபோது 2 அரவாணிகள் வந்து அவரிடம் காசு கேட்டனர். பேன்ட் பாக்கெட்டில் உள்ள பர்சில் இருந்து காசை எடுத்து கொடுத்தார். அப்போது அவரது சட்டை பாக்கெட்டில் இருந்த பணம் ரூ.8,500ஐ எடுத்துக் கொண்டு அரவாணிகள் ஓடிவிட்டனர். கண்ணதாசன் கொடுத்த புகாரின்படி, அடையாறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வாலிபரிடம் பணம் பறித்த தண்டையார்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்த கீதா (23), அனு (24) ஆகிய அரவாணிகளை கைது செய்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 11/3/2025 1:26:04 PM
-Updated 11/3/2025 12:36:41 PM
-Updated 11/3/2025 12:36:31 PM
-Updated 11/3/2025 11:04:58 AM
-Updated 11/3/2025 11:04:42 AM
-Updated 11/3/2025 11:04:29 AM
-Updated 11/3/2025 11:04:19 AM
-Updated 11/3/2025 10:54:00 AM
-Updated 11/3/2025 10:53:50 AM
-Updated 11/3/2025 10:53:40 AM
-Updated 11/3/2025 10:53:31 AM
-Updated 11/2/2025 3:51:52 PM
-Updated 11/2/2025 3:51:29 PM
-Updated 11/2/2025 3:51:07 PM
-Updated 11/2/2025 3:50:47 PM