ஆலந்தூர்: மணப்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் கேஸ் கசிவு ஏற்பட்டு இன்ஜினியர் உயிரிழந்தார். இரண்டு பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னை நந்தம்பாக்கம் அருகே மணப்பாக்கத்தில் வால்வு தயாரிக்கும் தனியார் கம்பெனி உள்ளது. இங்கு, நெல்லை மாவட்டம் அழகுசேரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த கருப்பசாமி (22) என்பவர் இன்ஜினியராக பணியாற்றினார். நைட்ரஜன் கலவையில் போட்டு வால்வுகளை பதப்படுத்தும் பணி நடக்கிறது. இன்று காலை அந்த பணியில் கருப்பசாமி மற்றும் சில ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வால்வில் கேஸ் கசிவு ஏற்பட்டது. அதை சரிசெய்ய கருப்பசாமி சென்ற போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இவரை காப்பாற்ற முயற்சித்த ஊழியர்கள் சிசுபாலன், தேவராஜ் ஆகியோரையும் கேஸ் தாக்கியது. மயக்க நிலையில் இருந்த 3 பேரையும் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலன் அளிக்காமல் கருப்பசாமி இறந்தார். மற்ற இரண்டு பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின்படி, நந்தபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/28/2012 1:41:41 PM
-Updated 10/28/2012 1:02:35 PM
-Updated 10/27/2012 1:04:37 PM
-Updated 10/27/2012 12:56:02 PM
-Updated 10/27/2012 12:55:47 PM
-Updated 10/27/2012 12:55:32 PM
-Updated 10/27/2012 12:55:18 PM
-Updated 10/27/2012 12:07:04 PM
-Updated 10/27/2012 12:06:55 PM
-Updated 10/27/2012 11:45:46 AM
-Updated 10/27/2012 11:45:36 AM
-Updated 10/27/2012 10:55:06 AM
-Updated 10/27/2012 10:54:54 AM
-Updated 10/27/2012 10:54:37 AM
-Updated 10/27/2012 10:54:25 AM