அண்ணா நகர்: சென்னை வில்லிவாக்கம் தெற்கு ஜெகநாதன் நகர் மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சுகுணா (62). இவரது கணவர் ரங்கநாதன் இறந்து விட்டார். நேற்று முன்தினம் இரவு சுகுணா வீட்டின் கீழ் தளத்தில் தூங்கினார். மகன் மாடியில் தூங்கினார். வீட்டில் டைனிங் டேபிளில் ஒரு பர்சில் 2 வளையல், ஒரு செயின் என 5 பவுன் நகைகளை வைத்து விட்டு, ஜன்னலை திறந்து வைத்து சுகுணா தூங்கியுள்ளார். இரவில் மர்ம நபர்கள் ஜன்னல் வழியாக நகையை திருடி சென்று விட்டனர். காலையில் எழுந்ததும் நகைகள் திருட்டு போனதை அறிந்து சுகுணா அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி வில்லிவாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடுகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/25/2012 4:02:38 PM
-Updated 10/25/2012 4:00:12 PM
-Updated 10/25/2012 3:59:57 PM
-Updated 10/25/2012 3:59:46 PM
-Updated 10/25/2012 3:59:34 PM
-Updated 10/25/2012 2:42:57 PM
-Updated 10/25/2012 2:42:44 PM
-Updated 10/25/2012 2:32:43 PM
-Updated 10/25/2012 2:32:31 PM
-Updated 10/25/2012 2:32:17 PM
-Updated 10/25/2012 2:18:21 PM
-Updated 10/25/2012 2:18:11 PM
-Updated 10/25/2012 2:18:02 PM
-Updated 10/25/2012 12:52:18 PM
-Updated 10/25/2012 12:51:34 PM