நாளை ஆயுத பூஜை பூசணிக்காய் உடைத்து சாலையில் போட்டால் அபராதம் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
சென்னை: ஆயுத பூஜை தினத்தில் பூசணிக்காய், தேங்காய் உடைத்து சாலையில் போட்டால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி
எச்சரித்துள்ளது. இது சம்பந்தமாக, மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாளை ஆயுதபூஜையையொட்டி சென்னை நகரில் உள்ள பெரிய, சிறிய கடைக்காரர்கள் பூசணிக்காய், தேங்காய் ஆகியவை உடைத்து சாலையில் போட்டு
விடுகிறார்கள்.
இதனால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். பொதுமக்கள் நடக்க சிரமப்படுகிறார்கள். நாளை ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. அனைத்து வர்த்தக நிறுவனங்களும் தேங்காய், பூசணிக்காய் உடைத்து விட்டு அவர்களே அப்புறப்படுத்தி, குப்பை தொட்டியில் போடவேண்டும். மீறி சாலையில் போட்டுவைக்கும் கடைக்காரர்களுக்கு மாநகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்படும். பொதுமக்களும் கடைக்காரர்களும் மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/24/2012 3:29:53 PM
-Updated 10/24/2012 3:29:43 PM
-Updated 10/24/2012 3:29:28 PM
-Updated 10/24/2012 3:29:15 PM
-Updated 10/24/2012 3:08:18 PM
-Updated 10/24/2012 3:08:08 PM
-Updated 10/24/2012 3:07:57 PM
-Updated 10/24/2012 3:07:46 PM
-Updated 10/24/2012 3:07:36 PM
-Updated 10/24/2012 3:07:27 PM
-Updated 10/24/2012 3:07:16 PM
-Updated 10/24/2012 2:52:28 PM
-Updated 10/24/2012 12:50:28 PM
-Updated 10/24/2012 12:50:18 PM
-Updated 10/24/2012 12:50:07 PM