பேனர் வைப்பதில் தகராறு கார் கண்ணாடி உடைத்த காங்கிரஸ் நிர்வாகி கைது
அண்ணா நகர்: கோயம்பேடு கெஸ்ட் ஹவுசில் கார் கண்ணாடி உடைத்த மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளரை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் தங்கம் செல்வராஜ் (52). இவர் கோயம்பேடு வியாபாரிகள் சங்க தலைவராகவும் உள்ளார். இவர் நேற்று கோயம்பேடு காளியம்மன் கோயில் ரோட்டில் புதிதாக ஒரு ஓட்டல் தொடங்கினார். அதை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் திறந்து வைத்தார். அதன் திறப்பு விழாவுக்கு ஓட்டலுக்கு எதிரே உள்ள கெஸ்ட் ஹவுஸ் முன்பு பேனர் வைத்தார். கெஸ்ட் ஹவுஸ் உரிமையாளர் சகுந்தலா (52).
இவரது கணவர் கருணா கரன், ஓய்வு பெற்ற வருமானவரி துறை அதிகாரி. பேனர் வைத்ததற்கு சகுந்தலா எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சகுந்தலாவுக்கும் தங்கம் செல்வராஜுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. திறப்பு விழா முடிந்ததும் மாலையில் தங்கம் செல்வராஜ் அங்கு சென்றார். கெஸ்ட் ஹவுஸ் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியை செங்கல்லால் அடித்து உடைத் தார். சகுந்தலாவை தரக்குறைவாக திட்டினார். இது பற்றி சென்னை போலீஸ் கமிஷனர் ஆபீசில் சகுந்தலா புகார் செய்தார். அதன் பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்கம் செல்வராஜை நேற்றிரவு கைது செய்தனர். பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/24/2012 3:29:53 PM
-Updated 10/24/2012 3:29:43 PM
-Updated 10/24/2012 3:29:28 PM
-Updated 10/24/2012 3:29:15 PM
-Updated 10/24/2012 3:08:18 PM
-Updated 10/24/2012 3:08:08 PM
-Updated 10/24/2012 3:07:57 PM
-Updated 10/24/2012 3:07:46 PM
-Updated 10/24/2012 3:07:36 PM
-Updated 10/24/2012 3:07:27 PM
-Updated 10/24/2012 3:07:16 PM
-Updated 10/24/2012 2:52:28 PM
-Updated 10/24/2012 12:50:28 PM
-Updated 10/24/2012 12:50:18 PM
-Updated 10/24/2012 12:50:07 PM