குமரன் பத்மநாதனை கைது செய்ய கோரி காங். தந்தி அனுப்பும் போராட்டம்
சென்னை: குமரன் பத்மநாதனை கைது செய்து இந்தியா வசம் ஒப்படைக்க வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையத்தில் தந்தி அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி தலைவர் சத்தியசீலன் தலைமை தாங்கினார். ஆயிரம் விளக்கு ரஞ்சன் குமார் முன்னிலை வகித்தார். இதில், காங்கிரஸ் மாவட்ட பொது செயலாளர்கள் குமாரமுருகன், எஸ்.விஜயன், ஜி.ஐ.சுதாகர், சேப்பாக்கம் நரேஷ், ஸ்டான்லி, டோம்னிக் உள்பட ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர். முடிவில், சத்தியசீலன், ரஞ்சன் குமார் அளித்த பேட்டியில், ‘சர்வதேச காவல்துறை மற்றும் இந்திய காவல் துறையாலும் அறிவிக்கப்பட்ட கொலை குற்றவாளியான குமரன் பத்மநாதனை உடனே கைது செய்து இந்திய சிறையில் அடைக்க வேண்டும். இதில், இலங்கை மற்றும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் வரும் 25ம் தேதி இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட் டம் நடத்தப்படும்Õ என்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/21/2012 2:13:00 PM
-Updated 10/21/2012 2:12:11 PM
-Updated 10/21/2012 2:11:31 PM
-Updated 10/21/2012 2:07:11 PM
-Updated 10/21/2012 2:06:54 PM
-Updated 10/21/2012 2:06:16 PM
-Updated 10/21/2012 1:52:01 PM
-Updated 10/21/2012 1:36:14 PM
-Updated 10/21/2012 1:35:49 PM
-Updated 10/21/2012 1:35:14 PM
-Updated 10/21/2012 1:33:49 PM
-Updated 10/20/2012 1:54:51 PM
-Updated 10/20/2012 1:54:31 PM
-Updated 10/20/2012 1:54:02 PM
-Updated 10/20/2012 1:53:47 PM