திருப்பதி பிரம்மோற்சவம் : ஹனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி உலா
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ 6ம் நாளான இன்று காலை ஹனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வந்தார். திருமலை-திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15ம் தேதி தொடங்கியது. 5ம் நாளான நேற்று மோகினி அலங்காரத்தில் மலையப்ப சுவாமியும், கிருஷ்ணரும் மாட வீதிகளில் பவனி வந்தனர். நேற்றிரவு கருட சேவையையொட்டி, மகாவிஷ்ணு அலங்காரத்தில் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் உலா வந்தார். திருமலையில் தொடர் கனமழையால் குடைகள் பிடித்தபிடி நான்கு மாடவீதிகளிலும் 2 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். 6ம் நாளான இன்று காலை ஹனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் பவனி வந்தார். நான்கு மாட வீதிகளிலும் திரண்டிருந்த பக்தர்கள் Ôகோவிந்தா, கோவிந்தாÕ என பக்தி முழக்கமிட்டனர். இன்றிரவு கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி மாட வீதியில் பவனி வருகிறார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/21/2012 2:13:00 PM
-Updated 10/21/2012 2:12:11 PM
-Updated 10/21/2012 2:11:31 PM
-Updated 10/21/2012 2:07:11 PM
-Updated 10/21/2012 2:06:54 PM
-Updated 10/21/2012 2:06:16 PM
-Updated 10/21/2012 1:52:01 PM
-Updated 10/21/2012 1:36:14 PM
-Updated 10/21/2012 1:35:49 PM
-Updated 10/21/2012 1:35:14 PM
-Updated 10/21/2012 1:33:49 PM
-Updated 10/20/2012 1:54:51 PM
-Updated 10/20/2012 1:54:31 PM
-Updated 10/20/2012 1:54:13 PM
-Updated 10/20/2012 1:53:47 PM