திமுக இளைஞர் அணி சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: திமுக பொருளாளரும் இளைஞர் அணி செயலாளருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: அண்ணா 104ம் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்புவித்தல் ஆகிய போட்டிகள் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் பங்கு பெறும் வகையில் நடத்தப்பட உள்ளது.
அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வருகிற 27, 28ம் தேதிகளில் முதல்கட்ட போட்டிகளும் நவம்பர் 3, 4ம் தேதிகளில் 2ம் கட்ட போட்டிகளும் நடைபெறும். ‘அண்ணாவும் கலைஞரும்’, ‘பெரியாரும் கலைஞரும்’ என்ற தலைப்புகளில் 7 நிமிட பேச்சுப் போட்டி, ‘மாணவர் நலனில் அண்ணாவும் கலைஞரும்’, ‘மொழிப் போரில் திமுக’ என்ற தலைப்புகளில் 100 வரி கட்டுரைப் போட்டியும், கவிதை ஒப்புவித்தல் போட்டியும் நடைபெறும். மாநில அளவிலான இறுதிக் கட்ட போட்டிகள் நவம்பர் 24, 25ம் தேதிகளில் தஞ்சாவூரில் நடைபெறும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/21/2012 2:13:00 PM
-Updated 10/21/2012 2:12:11 PM
-Updated 10/21/2012 2:11:31 PM
-Updated 10/21/2012 2:07:11 PM
-Updated 10/21/2012 2:06:54 PM
-Updated 10/21/2012 2:06:16 PM
-Updated 10/21/2012 1:52:01 PM
-Updated 10/21/2012 1:36:14 PM
-Updated 10/21/2012 1:35:49 PM
-Updated 10/21/2012 1:35:14 PM
-Updated 10/21/2012 1:33:49 PM
-Updated 10/20/2012 1:54:51 PM
-Updated 10/20/2012 1:54:31 PM
-Updated 10/20/2012 1:54:13 PM
-Updated 10/20/2012 1:54:02 PM