2012
19
Oct
கும்மிடிப்பூண்டியில் டெங்கு காய்ச்சல் தடுக்க விழிப்புணர்வு பேரணி


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பேரூராட்சி தலைவர் முத்துக்குமரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். கும்மிடிப்பூண்டி ஒன்றிய துவக்கப் பள்ளி, விவேகானந்தன் நகர் பள்ளி, மேட்டு தெரு பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி பேரணியில் பங்கேற்றனர்.

டெங்கு காய்ச்சல் தடுப்பது குறித்து துண்டு பிரசுரங்களை மக்களுக்கு வழங்கினர். கும்மிடிப் பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணி இரட்டம்பேடு, கோட்டகரை, பஜார் வீதி, ரயில்வே         சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து பேரூராட்சி அலுவலகத்தை அடைந்தது. செயல் அலுவலர் மணிவேல், கவுன்சிலர் தீனதயாளன், வட்டார சுகாதார மேற்பார் வையாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் சுகுமார், முரளிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Navratri Festival 2012, Navratri, Navratri 2012, Navratri Festival in india