திருவள்ளூர்: சித்தி வீட்டுக்கு சென்ற பிளஸ் 2 மாணவியை வாலிபர் கடத்திச் சென்றார். திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜப்பா, விவசாயி. சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மனைவி பத்மா. இவரது மகள் கீர்த்தனா (16), திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். நேற்று முன்தினம் மகளை மணிமங்கலத்தில் உள்ள தங்கை வீட்டுக்கு அனுப்பி வைத்தார் பத்மா.
ஆனால், சித்தி வீட்டுக்கு கீர்த்தனா போகவில்லை. இது தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த பத்மா அக்கம்பக்கத்தில் விசாரித்தார். அப்போதுதான் மகள் கடத்தப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசில் பத்மா புகார் கொடுத்தார். அதில், தனது மகளை புல்லரம்பாக்கம் காலனியில் வசிக்கும் முருகன் (22) என்பவர் கடத்திச் சென்று விட்டதாக கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை கடத்திய வாலிபரை தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/19/2012 5:46:35 PM
-Updated 10/19/2012 5:46:13 PM
-Updated 10/19/2012 2:28:52 PM
-Updated 10/19/2012 2:28:39 PM
-Updated 10/19/2012 2:28:26 PM
-Updated 10/19/2012 2:14:38 PM
-Updated 10/19/2012 2:00:16 PM
-Updated 10/19/2012 1:58:26 PM
-Updated 10/19/2012 1:58:07 PM
-Updated 10/19/2012 1:57:49 PM
-Updated 10/19/2012 1:57:30 PM
-Updated 10/19/2012 1:57:18 PM
-Updated 10/19/2012 1:57:04 PM
-Updated 10/19/2012 1:01:37 PM
-Updated 10/19/2012 1:01:03 PM