மாவோயிஸ்ட் கண்ணி வெடிக்கு மத்திய போலீசார் 2 பேர் பரிதாப பலி
பாட்னா: பீகார் மாநிலம் கயா மாவட்டத்தில் பாரா கிராமத்தில் மாவோயிஸ்ட்கள் புதைத்து வைத்த கண்ணி வெடியில் சிக்கி மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். பீகாரின் கயா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் பிரச்னை உள்ளது. இந்த பகுதியில் மத்திய ரிசர்வ் போலீசார் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 6.20 மணிக்கு ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த வீரர்கள் சிலர் கவச வாகனத்தில் பாரா கிராமம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் சிஆர்பிஎப் வாகனம் சிக்கி வெடித்து சிதறியது. இதில் சிஆர்பிஎப் வீரர்கள் 2 பேர் அதே இடத்தில் உயரிழந்தனர். 8 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் 3 பேரின் நிலைமை மிக மோசமாக உள்ளது. அவர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் ராஞ்சி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/19/2012 5:46:35 PM
-Updated 10/19/2012 5:46:13 PM
-Updated 10/19/2012 2:28:52 PM
-Updated 10/19/2012 2:28:39 PM
-Updated 10/19/2012 2:28:26 PM
-Updated 10/19/2012 2:14:38 PM
-Updated 10/19/2012 2:00:16 PM
-Updated 10/19/2012 1:58:26 PM
-Updated 10/19/2012 1:58:07 PM
-Updated 10/19/2012 1:57:49 PM
-Updated 10/19/2012 1:57:30 PM
-Updated 10/19/2012 1:57:18 PM
-Updated 10/19/2012 1:57:04 PM
-Updated 10/19/2012 1:01:37 PM
-Updated 10/19/2012 1:01:03 PM