நெய்வேலியில் மறியல் முயற்சி : தி.க. தலைவர் வீரமணி கைது
நெய்வேலி: காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடகத்துக்கு என்எல்சி மின்சாரம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, நெய்வேலியில் வீரமணி தலைமையில் திகவினர் மறியல் செய்தனர். தமிழகத்துக்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக மாநிலத்துக்கு, நெய்வேலியில் இருந்து மின்சாரம் அனுப்ப எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகம் சார்பில் இன்று என்எல்சி முன்பு மறியல் நடைபெற்றது. பெரியார் சதுக்கத்தில் இருந்து வீரமணி தலைமையில் இன்று காலை திராவிடர் கழகத்தினர் ஊர்வலமாக நெய்வேலி தலைமை அலுவலகம் நோக்கி சென்றனர். செயல் அவைத் தலைவர் அறிவுக்கரசு, பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன், ஜெயக்குமார், தஞ்சை மண்டல செயலாளர் ஜெயராமன், சென்னை மண்டல செயலாளர் ஞானசேகரன், கடலூர் மண்டல தலைவர் சம்பந்தம், செயலாளர் பன்னீர்செல்வம், கடலூர் மாவட்ட தலைவர் தண்டபாணி, நெய்வேலி நகர செயலாளர் கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர். வழியில் அவர்களை தடுத்து நிறுத்தி வீரமணி உள்பட தி.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/18/2012 5:57:02 PM
-Updated 10/18/2012 5:56:44 PM
-Updated 10/18/2012 5:56:12 PM
-Updated 10/18/2012 5:54:44 PM
-Updated 10/18/2012 4:42:18 PM
-Updated 10/18/2012 4:30:20 PM
-Updated 10/18/2012 4:29:21 PM
-Updated 10/18/2012 4:28:46 PM
-Updated 10/18/2012 3:48:53 PM
-Updated 10/18/2012 3:48:07 PM
-Updated 10/18/2012 3:47:21 PM
-Updated 10/18/2012 3:46:47 PM
-Updated 10/18/2012 3:17:48 PM
-Updated 10/18/2012 12:58:50 PM
-Updated 10/18/2012 12:50:43 PM