காவல்துறை அத்துமீறல்கள் அதிகரிப்பு: தா.பாண்டியன் பேட்டி
கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு கூட்டம் கோவை கவுண்டம்பாளையத்தில் இன்று காலை துவங்கியது. மூத்த தலைவர் நல்லகண்ணு கொடியேற்றி வைத்தார். நாளை மறுநாள் வரை கூட்டம் நடக்கிறது. முன்னதாக மாநில செயலாளர் தா.பாண்டியன் அளித்த பேட்டி: மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள், அன்னிய முதலீட்டு கொள்கைகளால் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொடர் போராட்டங்கள் நடத்துவது குறித்து மாநிலக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். இப்போது பல மணி நேர மின்வெட்டு காரணமாக சிறு, குறுந்தொழில்கள் அனைத்தும் அழிந்து போய் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தமிழகத்தில் வேலைஇழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை பற்றியும் மாநிலக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும். தமிழகத்தில் தற்போது காவல்துறையின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக சட்டத்திற்கு புறப்பான நடவடிக்கைகளில் காவல்துறையினர் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பொய்வழக்குகளை பதிவு செய்வது அதிகரித்துள்ளது. இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/13/2012 1:12:44 PM
-Updated 10/13/2012 1:07:37 PM
-Updated 10/13/2012 1:07:02 PM
-Updated 10/13/2012 1:03:58 PM
-Updated 10/13/2012 12:37:18 PM
-Updated 10/12/2025 3:41:58 PM
-Updated 10/12/2025 3:39:16 PM
-Updated 10/12/2025 3:38:59 PM
-Updated 10/12/2025 3:38:43 PM
-Updated 10/12/2025 3:33:10 PM
-Updated 10/12/2025 2:02:34 PM
-Updated 10/12/2025 1:07:11 PM
-Updated 10/12/2025 12:48:48 PM
-Updated 10/12/2025 12:48:19 PM
-Updated 10/12/2025 12:47:57 PM