அண்ணாநகர்: கோயம்பேடு பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த காதல் ஜோடியை போலீசார் பிடித்தனர். கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்றிரவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஒரு வாலிபர், இளம்பெண்ணுடன் சுற்றி திரிந்ததை பார்த்தனர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதில் அந்த வாலிபர், பாண்டிச்சேரி அருகே கீழூர் கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன் மகன் பிரேம் குமார் (21) என்பதும், இளம்பெண் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இளம்பெண்ணுக்கு 16 வயதுதான் ஆகிறது. 9ம் வகுப்பு வரை படித்த அவர் பக்கத்து ஊரில் உள்ள பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். வேலைக்கு பஸ்சில் போகும்போது கண்டக்ராக இருந்த பிரேம் குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள சென்னைக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். பிரேம் குமார் மீது புகார் ஏதாவது உள்ளதா என்று விசாரணை நடக்கிறது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/13/2012 1:12:44 PM
-Updated 10/13/2012 1:07:37 PM
-Updated 10/13/2012 1:07:02 PM
-Updated 10/13/2012 1:03:58 PM
-Updated 10/13/2012 12:37:18 PM
-Updated 10/12/2025 3:42:13 PM
-Updated 10/12/2025 3:41:58 PM
-Updated 10/12/2025 3:39:16 PM
-Updated 10/12/2025 3:38:59 PM
-Updated 10/12/2025 3:33:10 PM
-Updated 10/12/2025 2:02:34 PM
-Updated 10/12/2025 1:07:11 PM
-Updated 10/12/2025 12:48:48 PM
-Updated 10/12/2025 12:48:19 PM
-Updated 10/12/2025 12:47:57 PM