செங்குன்றத்தில் நடந்த கொடுமை வேலைக்கார பெண்ணை வீட்டில் அடைத்து சித்ரவதை
புழல்: வீட்டில் வேலை செய்து வந்த பெண்ணை தனி அறையில் அடைத்து சித்ரவதை செய்தது தொடர்பாக வீட்டு உரிமையாளரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை செங்குன்றம் வஉசி தெருவை சேர்ந்தவர் பீர் முகமது (37), லாரி டிரைவர். இவரது மனைவி பாத்திமா (27). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். செங்குன்றம் அம்பேத்கர் தெருவில் வசிக்கும் பானு என்பவர் வீட்டில் பாத்திமா வேலை செய்தார். கடந்த 10ம் தேதி வேலைக்கு சென்ற பாத்திமாவும் குழந்தைகளும் வீட்டுக்கு வரவில்லை. அவரை பற்றி உறவினர்கள் வீடுகளில் விசாரித்தனர். மேலும் கேரளா சென்றுள்ள கணவருக்கும் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில், பீர்முகமதுவின் அக்கா நேற்று செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரில், ‘பானு வீட்டில் உள்ள ஒரு அறையில் பாத்திமாவை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகின்றனர். குழந்தைகள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லைÕ என கூறியிருந்தார். இதையடுத்து நேற்று போலீசார் அங்கு விரைந்தனர். பானு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பாத்திமாவை மீட்டனர். அவரது கை, கால்களில் காயம் இருந்தது. இதனால் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், வீட்டு உரிமையாளர் பானுவிடம் விசாரிக்கின்றனர். மாமல்லபுரத்தில் உள்ள காப்பகத்தில் குழந்தைகள் இருப்பது தெரிந்து அவர்களை மீட்க போலீசார் சென்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/13/2012 1:12:44 PM
-Updated 10/13/2012 1:07:37 PM
-Updated 10/13/2012 1:07:02 PM
-Updated 10/13/2012 1:03:58 PM
-Updated 10/13/2012 12:37:18 PM
-Updated 10/12/2025 3:42:13 PM
-Updated 10/12/2025 3:41:58 PM
-Updated 10/12/2025 3:39:16 PM
-Updated 10/12/2025 3:38:59 PM
-Updated 10/12/2025 3:38:43 PM
-Updated 10/12/2025 2:02:34 PM
-Updated 10/12/2025 1:07:11 PM
-Updated 10/12/2025 12:48:48 PM
-Updated 10/12/2025 12:48:19 PM
-Updated 10/12/2025 12:47:57 PM