சிறப்பு முகாமில் குளறுபடி தேர்தல் பிரிவு தாசில்தார் சஸ்பெண்ட்
திருவண்ணாமலை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சுருக்க முறை திருத்தம் செய்வதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. கடந்த 7ம் தேதி தி.மலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடந்தது. அதில், பல இடங்களில் முகாம் அலுவலர்கள் வரவில்லை, படிவங்கள் வழங்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் ஏராளமான புகார்கள் கலெக்டருக்கு வந்தது. அதைத்தொடர்ந்து, கலெக்டர் விஜய் பிங்ளே நடத்திய விசாரணையில், முகாம் ஏற்பாடுகளை முறையாக ஒருங்கிணைக்க தேர்தல் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவந்தது. இதனால், தேர்தல் பிரிவு தாசில்தார் பொன்முடியை, அப்பணியில் இருந்து விடுவித்து கலெக்டர் உத்தரவிட்டார். இந்நிலையில், பொன்முடியை, தற்காலிக பணி நீக்கம் செய்து கலெக்டர் விஜய் பிங்ளே உத்தரவிட்டுள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/13/2012 1:12:44 PM
-Updated 10/13/2012 1:07:37 PM
-Updated 10/13/2012 1:07:02 PM
-Updated 10/13/2012 1:03:58 PM
-Updated 10/13/2012 12:37:18 PM
-Updated 10/12/2025 3:42:13 PM
-Updated 10/12/2025 3:41:58 PM
-Updated 10/12/2025 3:39:16 PM
-Updated 10/12/2025 3:38:59 PM
-Updated 10/12/2025 3:38:43 PM
-Updated 10/12/2025 3:33:10 PM
-Updated 10/12/2025 1:07:11 PM
-Updated 10/12/2025 12:48:48 PM
-Updated 10/12/2025 12:48:19 PM
-Updated 10/12/2025 12:47:57 PM