பாலாற்றில் மணல் எடுப்பதை கண்டித்து திருக்கழுக்குன்றத்தில் திடீர் கடையடைப்பு
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வல்லிபுரம் பாலாற்றில் 7 ஆழ்துளை கிணறுகள், 2 நீர் உறிஞ்சி கிணறுகள் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு அருகில் உள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டியில் நிரப்பி பைப் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், வல்லிபுரம் பாலாற்றில் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகே மணல் எடுப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகும். கடந்த 6ம் தேதி பேரூராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி தமிழ்மணி தலைமையில் துணைத் தலைவர், கவுன்சிலர்கள், வல்லிபுரம் பாலாற்றுக்கு சென்று கிணறுகள் அருகே மணல் எடுக்க கூடாது என்று எச்சரித்தனர். பின்னர், மணல் எடுக்க வாகனங்கள் செல்லாதவாறு ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டினர். பின்னர், நேற்று தோண்டப்பட்ட பள்ளத்தை மூடிவிட்டு மீண்டும் மணல் எடுக்கப்பட்டது. தகவல் அறிந்து பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் சென்று தட்டி கேட்டனர். பின்னர் டிராக்டர்கள் முன்பு படுத்து எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து செங்கல்பட்டு ஆர்டிஓ வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் மணல் எடுப்பதை கண்டித்து திருக்கழுக்குன்றத்தில் இன்று கடையடைப்பு நடந்தது. ஆட்டோ, கார்கள் ஓடவில்லை.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/10/2025 3:16:11 PM
-Updated 10/10/2025 12:56:52 PM
-Updated 10/10/2025 12:56:38 PM
-Updated 10/10/2025 12:53:17 PM
-Updated 10/9/2025 4:30:29 PM
-Updated 10/9/2025 4:25:12 PM
-Updated 10/9/2025 4:06:04 PM
-Updated 10/9/2025 4:05:19 PM
-Updated 10/9/2025 12:54:42 PM
-Updated 10/9/2025 12:54:24 PM
-Updated 10/9/2025 12:21:23 PM
-Updated 10/9/2025 12:19:35 PM
-Updated 10/8/2025 4:03:44 PM
-Updated 10/8/2025 4:03:27 PM
-Updated 10/8/2025 3:29:51 PM