2012
09
Oct
ஆரணி விவசாயிகளுக்கு குப்பையை மறுசுழற்சி மூலம் உரம் தயாரிக்க ஆலோசனை


கும்மிடிப்பூண்டி: ஆரணியில் தமிழ்நாடு நீர்வள  நிலவள, ஆரணி ஆற்று நீரை பயன்படுத்துவோர் சங்கம் மற்றும் விவசாய மகளிர் குழுவினருக்கான ஒருநாள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது. இதில் சுற்றுச்சூழல் இயக்குனர் பிரித்திவிராஜ், வேலூர் மாவட்ட எக்ஸ்னோரா தலைவர் தொல்காப்பியன், இயற்கை வேளாண்மை அமைப்பு தலைவர் புருசோத்தமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு, குப்பை சேகரித்து மறு சுழற்சி மூலம் உரம் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர். மேலும் நீர்வள மேலாண்மை, இயற்கை வள மேலாண்மை, கால நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், சொட்டுநீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், குறைந்த அளவில் அதிக மகசூல் பெறுவது, செம்மை நெல் சாகுபடி குறித்து விளக்கினர். ஆரணி நகர திமுக செயலாளர் கண்ணதாசன், முன்னாள் கவுன்சிலர் கரிகாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
T20 World Cup 2012,ICC World Cup Twenty20 2012,Twenty20 2012,Twenty20 2012 Schedule,Twenty20 2012 Venues,Twenty20,Twenty20 in Tamil