ஊத்துக்கோட்டை தாசில்தார் ஆபீசில் குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிப்பு
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். ஊத்துக்கோட்டை தாசில்தார் அலுவலகத்துக்கு ஊத்துக்கோட்டை மற்றும் 106 கிராமங்களை சேர்ந்த மக்கள், வேலை விஷயமாக வருகின்றனர். இந்த அலுவலகத்தில் தாசில்தார், மண்டல துணை வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர் உள்பட 25க்கு மேற்பட்ட அதிகாரிகளும் உள்ளனர். இங்கு, சாதி, இருப்பிட சான்றிதழ், வாரிசு சான்றிதழ் மற்றும் பட்டா பெயர் மாற்றம் புது ரேஷன் கார்டு உள்ளிட்டவைகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்களுக்காக தாசில்தார் அலுவலக வளாகத்தில் சின்டெக்ஸ் டேங்க் வைத்து குடி தண்ணீர் வழங்கினர். தற்போது டேங்கில் தண்ணீர் கிடையாது. மேலும், டேங்க் பைப்புகளையும் உடைத்துவிட்டனர். இதனால் குடிக்க தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர். எனவே, தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/10/2025 3:16:11 PM
-Updated 10/10/2025 12:56:52 PM
-Updated 10/10/2025 12:56:38 PM
-Updated 10/10/2025 12:53:17 PM
-Updated 10/9/2025 4:30:29 PM
-Updated 10/9/2025 4:25:12 PM
-Updated 10/9/2025 4:06:04 PM
-Updated 10/9/2025 4:05:19 PM
-Updated 10/9/2025 12:54:57 PM
-Updated 10/9/2025 12:54:42 PM
-Updated 10/9/2025 12:21:23 PM
-Updated 10/9/2025 12:19:35 PM
-Updated 10/8/2025 4:03:44 PM
-Updated 10/8/2025 4:03:27 PM
-Updated 10/8/2025 3:29:51 PM