சென்னை: செம்மண் எடுத்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு முன்னாள் அமைச்சர் பொன்முடி தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்குமாறு விழுப்புரம் மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் இன்று உத்தரவிட்டது. விதிமுறைகளை மீறி செம்மண் எடுத்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது விழுப்புரம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் பொன்முடி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் மாவட்டம் பூந்துறை கிராமத்தில் விதிமுறை மீறி செம்மண் எடுத்ததாக என் மீது போலீசார் பொய்யாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அரசியல் உள்நோக்கத்துடன் என் மீதும், என் மகன் மீதும் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. எந்த நேரமும் நாங்கள் கைது செய்யப்படுவோம் என்று அஞ்சுகிறோம். போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம். எனவே, எங்களுக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் பொன்முடி கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி ராஜேந்திரன் இன்று விசாரித்தார். வரும் வியாழக்கிழமை பதில் மனு தாக்கல் செய்யும்படி விழுப்புரம் மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/1/2025 5:13:48 PM
-Updated 9/30/2012 4:40:04 PM
-Updated 9/30/2012 4:39:47 PM
-Updated 9/30/2012 4:08:38 PM
-Updated 9/30/2012 1:37:33 PM
-Updated 9/30/2012 1:37:17 PM
-Updated 9/30/2012 1:34:43 PM
-Updated 9/30/2012 1:27:20 PM
-Updated 9/30/2012 1:23:44 PM
-Updated 9/30/2012 1:23:29 PM
-Updated 9/30/2012 1:21:26 PM
-Updated 9/30/2012 1:16:53 PM
-Updated 9/30/2012 1:14:38 PM
-Updated 9/30/2012 12:51:55 PM
-Updated 9/30/2012 12:51:38 PM