திருச்சி: தஞ்சை மாவட்டம், திருவையாறு பகுதியை சேர்ந்தவர் தவக்களை என்கிற அறிவழகன்(27). இவரை திருட்டு வழக்கில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது பல வழக்குகள் உள்ளதால் குண்டர் சட்டத்தின்கீழும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக திருவையாறு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தவக்களை ஆஜர்படுத்தப்பட்டார். எஸ்எஸ்ஐ சாமிநாதன், ஏட்டு வரதராஜன் ஆகியோர் பாதுகாப்புக்காக வந்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, மீண்டும் திருச்சி சிறைக்கு பைக்கில் அழைத்து சென்றனர். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சுப்ரமணியபுரம் அருகே வந்த போது மழை பெய்ததால், அவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் ஒதுங்கி நின்றனர். மழை நின்ற பின் மீண்டும் பைக்கில் செல்ல முற்படும் போது எஸ்எஸ்ஐ, ஏட்டுவை தாக்கிவிட்டு அறிவழகன் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே தவக்களையை தப்ப விட்ட எஸ்எஸ்ஐ சாமிநாதன், ஏட்டு வரதராஜன் ஆகியோரை மத்திய மண்டல ஐஜி அலெக்சாண்டர் மோகன் சஸ்பெண்ட் செய்து இன்று உத்தரவிட்டுள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 10/1/2025 5:15:25 PM
-Updated 10/1/2025 5:13:48 PM
-Updated 9/30/2012 4:40:04 PM
-Updated 9/30/2012 4:08:38 PM
-Updated 9/30/2012 1:37:33 PM
-Updated 9/30/2012 1:37:17 PM
-Updated 9/30/2012 1:34:43 PM
-Updated 9/30/2012 1:27:20 PM
-Updated 9/30/2012 1:23:44 PM
-Updated 9/30/2012 1:23:29 PM
-Updated 9/30/2012 1:21:26 PM
-Updated 9/30/2012 1:16:53 PM
-Updated 9/30/2012 1:14:38 PM
-Updated 9/30/2012 12:51:55 PM
-Updated 9/30/2012 12:51:38 PM