2012
20
Sep
ஸ்ரீபெரும்புதூர் அருகே வேன் மீது உரசியதில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது: கம்பெனி ஊழியர்கள் 17 பேர் படுகாயம்


ஸ்ரீபெரும்புதூர்: தனியார் கம்பெனி வேன் மீது உரசியதில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் கம்பெனி ஊழியர்கள் 17 பேர் படுகாயம் அடைந்தனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே நேற்று நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்ரீபெரும்புதூர் அருகே மண்ணூர் கூட்டு சாலையில் கார் உதிரிபாகம் தயாரிக்கும் தனியார் கம்பெனி உள்ளது. நேற்று மாலை 5.30 மணியளவில் கம்பெனி ஊழியர்களை ஏற்றிக்கொண்டு பேரம்பாக்கம் தண்டலம் சாலை வழியாக பஸ் சென்றது. மண்ணூர் பகுதியில் உள்ள மற்றொரு கம்பெனியில் ஊழியர்களை ஏற்றி வந்த வேன் எதிர் திசையில் வந்தது. மண்ணூர் ஏரி அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக வேனும் பஸ்சும் உரசிக்கொண்டதில் நிலை தடுமாறி 10 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. பஸ்ஸில் வந்த ஊழியர்கள் 14 பேர், வேனில் வந்த ஊழியர்கள் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதையறிந்ததும் அந்த வழியாக சென்றவர்கள் ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் வந்து விபத்தில் சிக்கி காயம் அடைந்தோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 2 பேர் போரூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள். பள்ளத்தில் விழுந்த பஸ் ராட்சத கிரேன் மூலம் அகற்றப்பட்டது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour">>Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour