2012
20
Sep
ஒகேனக்கல் அருகே இன்று காலை சோகம்: கார் கதவு திடீரென திறந்ததில் புதுமாப்பிள்ளை பரிதாப சாவு


ஒகேனக்கல்: ஒகேனக்கல் அருகே இன்று அதிகாலை கார் கதவு திடீரென திறந்ததில் அதில் தூங்கிக் கொண்டிருந்த புது மாப்பிள்ளை கீழே விழுந்து பலியானார். கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (31). தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். நண்பர்கள் பிரபு, சங்கர், ஜெயப்பிரகாஷ், மற்றொரு பிரபு ஆகியோருடன் நேற்றிரவு காரில் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தார். காரின் பின்பக்க கதவு பழுதடைந்திருந்ததால் அடிக்கடி திறந்து கொண்டது. இதனால், மற்றவர்களை முன்பக்க சீட்டில் உட்கார வைத்துவிட்டு, சரவணன் பின்பக்க சீட்டில் உட்கார்ந்திருந்தார். கதவு திறக்காமல் இருக்க, அதை கையால் இழுத்து பிடித்தபடி சென்றார். அதிகாலை 4.30 மணிக்கு ஒகேனக்கல் அருகே சின்னாறு பாலம் பகுதியில் கார் வேகமாக சென்று கொண்டிருந்தது. சரவணன் கண்ணயர்ந்து விட்டதால் கதவு திடீரென திறந்தது. தூக்கத்தில் இருந்த சரவணன் தடுமாறி ரோட்டில் விழுந்தார். தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவரை நண்பர்கள் மீட்டு, பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். சரவணனுக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. விபத்து குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour">>Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour