மேற்கு வங்க மந்திரி சபை கூட்டம் காங்கிரஸ் அமைச்சர்கள் புறக்கணிப்பு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தை காங்கிரஸ் அமைச்சர்கள் புறக்கணித்தனர். மத்திய அரசின் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு, டீசல் விலை உயர்வு, சிலிண்டர் கட்டுப்பாடு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.மு.கூட்டணியிலிருந்து விலகுவதாக திரிணாமுல் காங்கிரஸ் நேற்று முன்தினம் அறிவித்தது. அக்கட்சியை சேர்ந்த 7 அமைச்சர்களும் நாளை பதவி விலகுகிறார்கள். அவரை சமாதானப்படுத்த திரைமறைவு வேலைகள் நடப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இருப்பினும் இந்த விஷயத்தில் எந்த சமரசத்துக்கும் தயாராக இல்லை என மம்தா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசில் காங்கிரசும் இடம் பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாமல் தனித்து ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை பலம் திரிணாமுல் காங்கிரசுக்கு உள்ளது. இருப்பினும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்ததால் அமைச்சரவையில் காங்கிரசுக்கு 6 அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகுவதாக மம்தா அறிவித்திருப்பதை தொடர்ந்து மேற்கு வங்க அமைச்சரவையிலிருந்து விலகுவதா வேண்டாமா என்ற குழப்பம் அம்மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலிடத்திலிருந்து இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை. இந்நிலையில் மம்தா தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தை காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக புறக்கணித்தனர். இது குறித்து மேற்கு வங்க பொறுப்பாளரும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஷகீல் அகமது கூறுகையில், கூட்டத்தில் பங்கேற்பது குறித்து அமைச்சர்கள் என்னிடம் ஆலோசனை கேட்டனர். மேலிடத்திலிருந்து எந்த உத்தரவும் வராததால் உங்கள் விருப்பப்படி முடிவு எடுங்கள் என தெரிவித்து விட்டேன். மம்தாவின் இறுதி முடிவுக்கு பின்னர் மாநில அமைச்சரவையில் நீடிப்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுக்கும் என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour">
-Updated 9/22/2012 2:22:07 PM
-Updated 9/22/2012 12:46:41 PM
-Updated 9/22/2012 12:33:04 PM
-Updated 9/22/2012 12:32:48 PM
-Updated 9/21/2012 3:08:14 PM
-Updated 9/21/2012 12:45:43 PM
-Updated 9/21/2012 12:45:27 PM
-Updated 9/20/2012 3:18:38 PM
-Updated 9/20/2012 3:18:19 PM
-Updated 9/20/2012 2:48:51 PM
-Updated 9/20/2012 2:10:46 PM
-Updated 9/20/2012 2:10:32 PM
-Updated 9/19/2012 3:32:38 PM
-Updated 9/17/2012 4:40:37 PM
-Updated 9/17/2012 3:43:56 PM