சூதாட்டத்தை படம் பிடித்த கேமராமேன்களை தாக்கிய போலீஸ்: திருப்பதியில் பரபரப்பு
திருமலை: திருமலையில் பிரம்மோற்சவ பாதுகாப்புக்கு வந்த போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை படம் பிடித்த 2 கேமராமேன்களை போலீசார் தாக்கிய சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. திருமலை ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்துக்காக ஆந்திராவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக திருமலைக்கு வந்துள்ளனர். இதில் 400 போலீசார் யாத்ரிகர்கள் தங்கும் 3வது விடுதியில் தங்கி உள்ளனர். இவர்களில் ஒருசிலர் நேற்று அதிகாலை சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனை டிவி கேமராமேன்கள் 2 பேர் படம் பிடித்துக்கொண்டிருந்தனர். இதைக்கண்டு ஆத்திரமடைந்த போலீசார், கேமராவை பறித்து படம் பிடித்தவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். போலீசார் சூதாடிய காட்சி ஆந்திர சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனால் பக்தர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.
இதனிடையே தேவஸ்தான அதிகாரிகள் போலீசாரை கடுமையாக எச்சரித்தனர். கேமராமேன்களை தாக்கிய போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரி அசோக்குமார் தெரிவித்தனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘அலிபிரி சோதனை சாவடியில் அனைவரது வாகனங்களையும், உடமைகளையும் தீவிரமாக சோதனை செய்து சிகரெட், புகையிலை, மதுபாட்டில்கள் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. ஆனால் போலீசார் மட்டும் எந்தவித சோதனைக்கும் உட்படுத்தப்படுவதில்லை. இதனால் அவர்கள் திருமலையில் சூதாட்டம் போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்’ என்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour">
-Updated 9/22/2012 2:22:07 PM
-Updated 9/22/2012 12:46:41 PM
-Updated 9/22/2012 12:33:04 PM
-Updated 9/22/2012 12:32:48 PM
-Updated 9/21/2012 3:08:14 PM
-Updated 9/21/2012 12:45:43 PM
-Updated 9/21/2012 12:45:27 PM
-Updated 9/20/2012 3:18:38 PM
-Updated 9/20/2012 3:18:19 PM
-Updated 9/20/2012 2:48:51 PM
-Updated 9/20/2012 2:10:46 PM
-Updated 9/20/2012 2:10:32 PM
-Updated 9/20/2012 2:10:10 PM
-Updated 9/17/2012 4:40:37 PM
-Updated 9/17/2012 3:43:56 PM