2012
17
Sep
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு 2ம் கட்ட கவுன்சலிங் தொடக்கம்


கீழ்பாக்கம்: கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான 2ம் கட்ட கவுன்சலிங் இன்றும் நாளையும் நடக்கிறது. தமிழ்நாட்டில் 18 அரசு மருத்துவ கல்லூரிகளும் 12 சுயநிதி மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீடு போக 1,823 எம்பிபிஎஸ் இடங்களும் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களும் இருந்தன. இந்த இடங்களை நிரப்புவதற்கான முதல் கட்ட கவுன்சலிங் கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது. தற்போது அரசு மருத்துவ கல்லூரிகளில் காலியாக உள்ள 39 எம்பிபிஎஸ் இடங்களுக்கும் தனியார் மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள 79 இடங்கள் மற்றும் அரசு பல் மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள 19 இடங்கள், தனியார் கல்லூரிகளில் உள்ள 106 இடங்களுக்கு இன்று 2ம் கட்ட கவுன்சலிங் கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி அரங்கத்தில் தொடங்கியது. இதில் கலந்துகொள்ள 200 பேருக்கு அழைப்பு அனுப்பி இருந்தனர். நாளையும் கவுன்சலிங் நடைபெறுகிறது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour">>Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour