ஆம்பூர்: மாமியார் வீட்டுக்கு சென்று திரும்பிய முட்டை வியாபாரி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதையறிந்த அவரது 2 மனைவிகளும் கதறி அழுதனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கலந்திரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் என்ற குமார் (37). முட்டை வியாபாரி. வாணியம்பாடி அடுத்த இளையநகரத்தை சேர்ந்த சத்யா(27) என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு குமார் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் குமார், சத்யாவின் தங்கை கிளியம்மாவை(24) 2வதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் குமார் நேற்று மாலை தனது மாமியார் வீட்டுக்கு பைக்கில் சென்றார். பின்னர் அங்கிருந்து இரவு புறப்பட்டு கலந்திரா நோக்கி சென்றுள்ளார். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிலர் நாற்கர சாலை வழியாக சென்றனர். அப்போது அங்கு ஒரு பைக் கவிழ்ந்து கிடப்பதை கண்டனர். அருகில் சென்று பார்த்த போது ஒருவர் தலை மற்றும் கைகள் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலையானவர் முட்டை வியாபாரி குமார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன் கொலை செய்யப்பட்ட தகவலை அறிந்த அவரது மனைவிகளான சத்யாவும், கிளியம்மாவும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை கொலை செய்தவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/10/2025 4:05:07 PM
-Updated 9/10/2025 4:02:04 PM
-Updated 9/10/2025 3:16:22 PM
-Updated 9/10/2025 3:09:52 PM
-Updated 9/10/2025 2:48:23 PM
-Updated 9/10/2025 2:48:04 PM
-Updated 9/10/2025 2:47:55 PM
-Updated 9/9/2025 3:39:18 PM
-Updated 9/9/2025 3:36:23 PM
-Updated 9/9/2025 3:36:03 PM
-Updated 9/9/2025 3:35:39 PM
-Updated 9/8/2025 2:38:12 PM
-Updated 9/8/2025 2:37:56 PM
-Updated 9/8/2025 2:28:47 PM
-Updated 9/8/2025 12:34:14 PM