2012
05
Sep
ஆம்பூரில் கார் மோதி 2 பெண்கள் பலி இன்று காலை சோகம்


ஆம்பூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் பாபுலா மாதர் தெருவைச் சேர்ந்தவர் ஷகில் அஹமத் (52). இவர் ஆம்பூர் அருகே உள்ள ஷூ கம்பெனியில் வேலை செய்கிறார். இவரது மனைவி கோசம்பர்வின் (48). இவரும், பக்கத்து வீட்டில் வசிக்கும் முகமத்பாஷாவின் மனைவி உமரா ஹனியும் (55) தோழிகள். இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவு செய்தனர். இதற்காக இன்று அதிகாலை 5 மணியளவில் ஆட்டோவில் ஆம்பூர் ரயில் நிலையத்துக்கு புறப்பட்டனர். அவர்களுடன் ஷகில் அஹமத்தும் சென்றார்.  ரயில் நிலையம் அருகே நேரடியாக ஆட்டோ செல்ல பாதை இல்லாததால் 1 கி.மீ. தூரம் சுற்றி ரயில் நிலையத்திற்கு வர வேண்டும். இதனால் ரயிலை தவற விட்டுவிடுவாமோ என நினைத்து 3 பேரும் தேசிய நெடுஞ்சாலை  நேதாஜி ரோடு சந்திப்பில் இறங்கினர். அப்போது ஷகில் அஹமது, ஆட்டோவுக்கு பணம் கொடுத்து கொண்டிருந்தார்.
ஆட்டோவிலிருந்து இறங்கிய கோசம் பர்வின், உமரா ஹனி ஆகியோர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர். அப்போது வாணியம்பாடியில் இருந்து வேலூர் நோக்கி சென்ற ஒரு கார் இருவர் மீதும் மோதியது. இதில் படுகாயமடைந்த கோசம் பர்வின் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய உமரா ஹனி, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். கார் டிரைவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour