சென்னை: உள்ளூர் விசாரணை எண், புகார் பதிவு எண் உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கான அடிப்படை சேவைகளை தனியாரிடம் அளிப்பதை கண்டித்து சென்னை தொலைபேசி வட்ட பிஎஸ்என்எல் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. சென்னை புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள சென்னை தொலைபேசி தலைமை அலுவலக வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலை தொடங்கியது. உண்ணாவிரதத்திற்கு கூட்டமைப்பு நிர்வாகி விஜயகுமார் தலைமை வகித்து பேசினார். கூட்டமைப்பு செயலாளர் கோவிந்தராஜ் பேசும்போது, வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிறுவனம் வழங்க வேண்டிய அடிப்படை சேவைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது மூலம் சென்னை தொலைபேசிக்கு 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். அதனால் நிறுவனத்திற்கு மேலும் நஷ்டம் ஏற்படும். தனியாருக்கு சேவைகளை தாரை வார்க்கும் முடிவை கைவிடும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/7/2025 5:27:49 PM
-Updated 9/7/2025 5:27:27 PM
-Updated 9/7/2025 5:27:12 PM
-Updated 9/7/2025 4:28:17 PM
-Updated 9/7/2025 4:27:59 PM
-Updated 9/7/2025 4:27:33 PM
-Updated 9/7/2025 4:27:18 PM
-Updated 9/7/2025 4:27:02 PM
-Updated 9/5/2025 4:02:29 PM
-Updated 9/5/2025 4:02:14 PM
-Updated 9/3/2025 4:08:45 PM
-Updated 9/3/2025 4:08:23 PM
-Updated 9/3/2025 4:07:44 PM
-Updated 9/3/2025 3:19:17 PM
-Updated 9/3/2025 3:01:38 PM