நாடாளுமன்றத்தை முடக்குவதா? பாஜவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
சென்னை: நாடாளுமன்றத்தை முடக்கும் பாஜவை கண்டித்து இந்திய காங்கிரஸ் தொழிலாளர் முன்னணி சார்பில் மெமோரியல் ஹால் முன்பு இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய தலைவர் டி.கே.சத்தியசீலன் தலைமை வகித்தார். வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜவகர், மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜான்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் 50 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் முடிந்ததும் சத்தியசீலன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்திய ஜனநாயக நாட்டில் மதிப்புமிக்க நாடாளுமன்றத்தை பதவி ஆசைக்காக பாஜ கூச்சலிட்டு முடக்கி வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த செயலை பாஜ உடனே நிறுத்த வேண்டும். இல்லையேல் பாஜவை கண்டித்து இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தப்படும். தமிழ்நாட்டில் திருச்சி, மதுரை, நாகர்கோவில் ஆகிய இடங்களில் இன்னும் ஓரிரு நாளில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’’ என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 9/8/2025 12:25:40 PM
-Updated 9/7/2025 5:27:49 PM
-Updated 9/7/2025 5:27:27 PM
-Updated 9/7/2025 5:27:12 PM
-Updated 9/7/2025 4:28:17 PM
-Updated 9/7/2025 4:27:59 PM
-Updated 9/7/2025 4:27:33 PM
-Updated 9/7/2025 4:27:18 PM
-Updated 9/7/2025 4:27:02 PM
-Updated 9/5/2025 4:02:29 PM
-Updated 9/5/2025 4:02:14 PM
-Updated 9/3/2025 4:08:45 PM
-Updated 9/3/2025 4:08:23 PM
-Updated 9/3/2025 4:08:06 PM
-Updated 9/3/2025 3:19:17 PM