திருப்பதி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து பக்தர் பலி: 3 பேர் படுகாயம்
திருப்பதி: திருப்பதி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் பெங்களூரை சேர்ந்த பக்தர் பரிதாபமாக இறந்தார். டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் துரைசாமி (55). இவர், மனைவி சாந்தம்மா (50), உறவினர் பசவய்யா (55) ஆகியோருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்று காலை காரில் வந்தார். பெங்களூரை சேர்ந்த ரமேஷ் (35) என்பவர் காரை ஓட்டினார். பிற்பகலில் சித்தூர் அடுத்த காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, திருமலை நோக்கி புறப்பட்டனர். திருப்பதி அடுத்த பாகாலா அருகே சென்றபோது பசு ஒன்று ரோட்டின் குறுக்கே ஓடிவந்தது. அதன்மீது மோதாமல் இருக்க டிரைவர் திடீர் பிரேக் போட்டுள்ளார். நிலை தடுமாறிய கார், சாலை அருகே உள்ள சுமார் 6 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே பசவய்யா பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த துரைசாமி, சாந்தம்மா, டிரைவர் ரமேஷ் ஆகியோர் பாகாலா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து பாகாலா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/27/2012 2:26:56 PM
-Updated 8/26/2012 3:14:05 PM
-Updated 8/25/2012 2:27:09 PM
-Updated 8/25/2012 2:26:49 PM
-Updated 8/25/2012 1:33:04 PM
-Updated 8/25/2012 1:32:49 PM
-Updated 8/25/2012 1:12:23 PM
-Updated 8/25/2012 12:33:33 PM
-Updated 8/24/2012 4:02:31 PM
-Updated 8/24/2012 4:02:12 PM
-Updated 8/24/2012 4:01:54 PM
-Updated 8/24/2012 3:59:18 PM
-Updated 8/24/2012 3:59:01 PM
-Updated 8/24/2012 12:56:40 PM
-Updated 8/22/2012 11:39:55 AM