பூங்காவுக்கு வைக்கப்பட்ட கருணாநிதி பெயர் நீக்கம்: மா.சுப்பிரமணியன் கண்டனம்
சென்னை: சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்ட அறிக்கை: பெரம்பூர், நியூபேரன்ஸ் சாலையில் உள்ள பூங்காவுக்கு மன்ற அனுமதியில்லாமல், திமுக தலைவர் கருணாந¤தியின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் விதிகளை மீறி அந்த பெயர் வைக்கப்பட்டிருப்பதால் அது நீக்கப்படும் என்றும் மேயர் கூறியுள்ளார். ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன், அந்தப் பகுதியின் மாநகராட்சி மன்ற உறுப்பினராக இருந்த மறைந்த பாலனால் இந்த பூங்கா உருவாக்கி திறக்கப்பட்டது. அப்போதைய மன்றக் கூட்டத்தில், முறையாக தீர்மானம் நிறைவேற்ற¤ பின்னரே, அந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை தெரிந்து கொள்ளாமலேயே, மேயர் பதில் என்பது நுனிப் புல் மேய்வது என்பார்களே அதுபோல் உள்ளது. அதுமட்டுமல்லாமல், சென்னை நகரில் மழைநீர் வடிகால் பணிகளின் மெத்தனத்திற்கு, முந்தைய திமுக அரசும் மாநகராட்சி நிர்வாகமும்தான் காரணம் என்று கூறியுள்ளார் மேயர். சென்னை நகரின் எந்த வளர்ச்சியாக இருந்தாலும், அது திமுக அரசின்போது மட்டுமே நடைபெற்றுள்ளது என்பதை விவரமறிந்தவர்கள் அறிவர். உலகத் தமிழர்களின் உள்ளங்களில் கல்வெட்டாய் பதிந்திருக்கும் தலைவர் கருணாநிதியின் பெயரை, ஏதோ ஒரு சிறு பூங்காவிலிருந்து எடுக்க நினைப்பது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/26/2012 3:14:05 PM
-Updated 8/26/2012 11:46:53 AM
-Updated 8/25/2012 2:26:49 PM
-Updated 8/25/2012 1:33:04 PM
-Updated 8/25/2012 1:32:49 PM
-Updated 8/25/2012 1:12:23 PM
-Updated 8/25/2012 12:33:33 PM
-Updated 8/24/2012 4:02:31 PM
-Updated 8/24/2012 4:02:12 PM
-Updated 8/24/2012 4:01:54 PM
-Updated 8/24/2012 3:59:18 PM
-Updated 8/24/2012 3:59:01 PM
-Updated 8/24/2012 12:56:40 PM
-Updated 8/22/2012 11:39:55 AM
-Updated 8/20/2012 2:52:53 PM