கும்மிடிப்பூண்டி முகாமில் இருந்து ஆன்மீக சுற்றுலா செல்வதாக கூறிவிட்டு 21 அகதிகள் ஆஸ்திரேலியா தப்ப முயற்சி
கும்மிடிப்பூண்டி: சுற்றுலா செல்வதுபோல நடித்து கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமை சேர்ந்த 21 பேர் ஆஸ்திரேலியா தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக க்யூ பிராஞ்ச் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அகதிகளை சுற்றுலா அழைத்துச் சென்ற ஏஜென்டை தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட் டம் கும்மிடிப்பூண்டி தாலுகா அலுவலகம் அருகே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு 600 குடும்பங்களை சேர்ந்த 1600 பேர் அகதிகளாக தங்கியுள்ளனர். இவர்களுக்கு மானிய விலையில் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. அதற்காக முகாம் வளாகத்தில் ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் அரசு சார்பில் நிவாரண தொகையும் வழங்கப்படுகிறது.
முகாமை சேர்ந்த 21 பேர் மதுரை, வேளாங்கண்ணி, மேல்மருவத்தூர் உள்ளிட்ட கோயில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்வதாக கூறி முகாம் அதிகாரிகளிடம் அனுமதி வாங்கினர். அனுமதி கிடைத்ததும் தனியார் சுற்றுலா ஏஜென்ட் மூலம் கடந்த ஜூன் 15ம் தேதி சுற்றுலா புறப்பட்டனர். ஆனால், 2 மாதங்களுக்கு மேலாகியும் அவர்கள் முகாமுக்கு திரும்பவில்லை. இந்நிலையில், அகதிகள் அனைவரும் நேற்று முன்தினம் மாமல்லபுரம் வந்தனர். அப்போது காஞ்சிபுரம் க்யூ பிராஞ்ச் போலீசார் சந்தேகத்தின் பேரில் அவர்களை பிடித்து விசாரித்தனர். அனைவரும் கும்மிடிப் பூண்டி முகாமை சேர்ந்தவர்கள் என்று தெரிந்தது. அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, அவர்களை அழைத்து வந்த ஏஜென்ட், கோவளம் லாட்ஜ் ஒன்றில் தங்க வைத்திருந்ததும், அவர் மூலம் ஆஸ்திரேலியா தப்ப முயன்றதும் தெரியவந்தது. போலீசார் அவர்களை கும்மிடிப் பூண்டி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர். அகதிகளை சுற்றுலா அழைத்து சென்ற ஏஜென்ட் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கும்மிடிப் பூண்டி அகதிகள் முகாமில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிகாரிகள், போலீசார் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அகதிகள் சுற்றுலா செல்ல எத்தனை நாள் அனுமதி அளிக்கப்பட்டது, அவர்கள் திரும்பி வராத நிலையில் தேடும் பணி தொடங்கப்பட்டதா என்பது பற்றியெல்லாம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/26/2012 3:14:05 PM
-Updated 8/26/2012 11:46:53 AM
-Updated 8/25/2012 2:27:09 PM
-Updated 8/25/2012 2:26:49 PM
-Updated 8/25/2012 1:33:04 PM
-Updated 8/25/2012 1:32:49 PM
-Updated 8/25/2012 1:12:23 PM
-Updated 8/24/2012 4:02:31 PM
-Updated 8/24/2012 4:02:12 PM
-Updated 8/24/2012 4:01:54 PM
-Updated 8/24/2012 3:59:18 PM
-Updated 8/24/2012 3:59:01 PM
-Updated 8/24/2012 12:56:40 PM
-Updated 8/22/2012 11:39:55 AM
-Updated 8/20/2012 2:52:53 PM