2012
20
Aug
ரம்ஜான் நாளில் பரிதாபம் நந்தம்பாக்கம் ஏரியில் மூழ்கி சிறுவன் சாவு பெற்றோர் கதறல்


பூந்தமல்லி : நந்தம்பாக்கம் ஏரியில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான். ரம்ஜான் நாளில் நடந்த சம்பவம் அவனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குன்றத்தூர் அடுத்த பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் மன்னான். இவரது மகன் அப்துல் சலாம் (15), அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியே சென்ற அப்துல் சலாம், இரவு வரை வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் பல இடங்களில் தேடினர். எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இன்று காலை நந்தம்பாக்கம் ஏரியில் ஒரு சிறுவன் சடலம் மிதந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சென்று சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்து கிடந்தது மாயமான அப்துல் சலாம் என்பது விசாரணையில் தெரிந்தது. சலாமின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பதறியடித்து வந்தனர். மகன் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். சலாம் அங்கு எப்படி வந்தான்? ஏரியில் தவறி விழுந்து இறந்தானா அல்லது வேறு காரணமா என போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். ரம்ஜான் நாளில் நடந்த இந்த சம்பவம், அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,