போலீஸ் ஸ்டேஷனுக்கு கட்டிடம் கட்டப்படுமா? ஊத்துக்கோட்டை மக்கள் எதிர்பார்ப்பு
ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு கட்டிடம் கட்டவேண்டும். காலியாக இருக்கும் காவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று போலீசாரும் மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆந்திர - தமிழக எல்லை பிரிப்பதற்கு முன்பே 1955-ம் ஆண்டு ஊத்துக்கோட்டை ரெட்டி தெருவில் புறக்காவல் நிலையம் இயங்கிவந்தது. ஆந்திர - தமிழக எல்லை பிரித்த பிறகு, காவல் நிலையமாக மாற்றப்பட்டது. அப்போது ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ. உள்பட 30 பேர் பணியாற்றி வந்தனர். இந்த காவல்நிலைய கட்டுப்பாட்டில் 48 கிராமங்கள் வருகின்றன. பழைய கட்டிடம் என்பதால் மழைக் காலத்தில் ஓடு வழியாக தண்ணீர் ஒழுகி ஆவணங்கள் நனைந்தன. இதையடுத்து, இந்த காவல் நிலையம் நாகலாபுரம் சாலையில் உள்ள மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. மகளிர் காவல் நிலையம், காவலர் குடியிருப்பில் எஸ்.ஐ.க்கு ஒதுக்கப்பட்ட அறையில் செயல்பட்டு வருகிறது.
ஸ்டேஷனுக்கு உயரதிகாரிகள் ஒவ்வொரு முறை விசிட்டுக்கு வரும்போதும், கட்டிடம் கட்டப்படும் என்று உறுதி அளித்துவிட்டு செல்கின்றனர். ஆனால் நடவடிக்கை எடுப்பது இல்லை. ஊத்துக்கோட்டை ஸ்டேஷனில் தற்போது ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ. மற்றும் 11 சிறப்பு எஸ்.ஐ.க்கள், 11 ஏட்டு என 24 பேர் பணியாற்றுகிறார்கள். 6 காவலர்கள் இடம் காலியாக உள்ளது. இதனால் வழக்குப்பதிவு செய்ய சிரமம் ஏற்படுகிறது. அடிதடி, திருட்டு நடக்கும் இடத்துக்கு போலீசார் உடனடியாக செல்ல முடியவில்லை. ஸ்டேஷனுக்கு கட்டிடம் கட்டவேண்டும். காலியாக உள்ள காவலர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று போலீசாரும் பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/20/2012 2:52:53 PM
-Updated 8/20/2012 1:19:14 PM
-Updated 8/20/2012 1:18:57 PM
-Updated 8/20/2012 1:18:41 PM
-Updated 8/20/2012 1:15:09 PM
-Updated 8/20/2012 1:14:59 PM
-Updated 8/20/2012 1:09:07 PM
-Updated 8/20/2012 1:08:55 PM
-Updated 8/14/2012 2:25:02 PM
-Updated 8/14/2012 2:24:35 PM
-Updated 8/14/2012 2:24:04 PM
-Updated 8/14/2012 2:23:44 PM
-Updated 8/14/2012 2:20:36 PM
-Updated 8/14/2012 2:20:13 PM
-Updated 8/13/2012 3:48:44 PM