பள்ளிப்பட்டு ஆஞ்சநேயர் நகரில் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு
பள்ளிப்பட்டு : பள்ளிப்பட்டு அடுத்த தளவாய்பட்டடையில் உள்ள ரேஷன் கடையில் ஆயிரத்துக்கும் அதிகமான கார்டுதாரர் உள்ளனர். இங்கு ரேஷன் கார்டுதாரர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் பொருட்கள் கிடைக்காமலும் கூட்ட நெருக்கடியிலும் மக்கள் தவித்தனர். இதனால் ரேஷன் கடையை பிரித்து, பள்ளிப்பட்டு ஆஞ்சநேயர் நகரில் பகுதி ரேஷன் கடை திறக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, நேற்று முன்தினம் ஆஞ்சநேயர் நகரில் பகுதி நேர ரேஷன் கடை திறக்கப்பட்டு, 422 கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. ரேஷன் கடை திறப்பு விழாவுக்கு, பள்ளிப்பட்டு வட்டாட்சியர் மாணிக்கம் தலைமை தாங்கினார். மாவட்ட வழங்கல் அலுவலர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். வட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் வரவேற்றார். தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி பிஎம்.நரசிம்மன் கலந்து கொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்தார். அவர் பேசும்போது, Ôபகுதி ரேஷன் கடையாக உள்ள இது விரைவில் முழு நேர கடையாக மாற்றி, கட்டிடம் கட்டி தரப்படும்Õ என்றார். விழாவில், பேரூராட்சி தலைவர் சித்ரா சிவகுமார், துணை தலைவர் மோகன்ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சண்முகம், ஆர்கே.பேட்டை ஒன்றிய குழு தலைவர் இளங்கோவன், துணை தலைவர் ஜெயவேல், வக்கீல் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/20/2012 2:52:53 PM
-Updated 8/20/2012 1:19:31 PM
-Updated 8/20/2012 1:18:57 PM
-Updated 8/20/2012 1:18:41 PM
-Updated 8/20/2012 1:15:09 PM
-Updated 8/20/2012 1:14:59 PM
-Updated 8/20/2012 1:09:07 PM
-Updated 8/20/2012 1:08:55 PM
-Updated 8/14/2012 2:25:02 PM
-Updated 8/14/2012 2:24:35 PM
-Updated 8/14/2012 2:24:04 PM
-Updated 8/14/2012 2:23:44 PM
-Updated 8/14/2012 2:20:36 PM
-Updated 8/14/2012 2:20:13 PM
-Updated 8/13/2012 3:48:44 PM