லண்டனில் உண்ணாவிரதம் இருக்கும் சிவந்தன் கோபிக்கு கருணாநிதி வேண்டுகோள்
சென்னை: ஈழத் தமிழர்களின் நிலையை உலக நாடுகளின் பார்வைக்கு கொண்டு செல்ல லண்டனில் உண்ணாவிரதம் இருக்கும் சிவந்தன் கோபி போராட்டத்தை கைவிடவேண்டும் என கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கை: அடிப்படை வாழ்வுரிமைகளோ, அரசியல் உரிமைகளோ இன்றி வாடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களின் இன்றைய நிலையை உலக நாடுகளின் பார்வைக்கு கொண்டு செல்லும் முயற்சியாக லண்டனில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடங்கிய நாளில் இருந்து ஈழத் தமிழ் இளைஞர் சிவந்தன் கோபி காலவரையற்ற பட்டினி போராட்டம் நடத்தி வருகிறார். இந்த செய்தி அனைவரது நெஞ்சங்களிலும் கலக்கத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. ஈழ மக்களின் உரிமைகளுக்காகவும், மறு வாழ்விற்காகவும் உலக தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டிய இத்தருணத்தில் விலை மதிப்பில்லா பட்டினி போராட்டத்தை கைவிடவேண்டும். வேறு அறவழிகளில் அனைவருடன் இணைந்து செயல்களில் ஈடுபடுமாறு அவரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/12/2025 11:46:30 AM
-Updated 8/12/2025 11:36:59 AM
-Updated 8/12/2025 11:36:04 AM
-Updated 8/12/2025 11:32:57 AM
-Updated 8/11/2025 12:38:34 PM
-Updated 8/10/2025 2:46:39 PM
-Updated 8/10/2025 2:38:44 PM
-Updated 8/10/2025 1:14:40 PM
-Updated 8/10/2025 1:13:55 PM
-Updated 8/10/2025 12:59:22 PM
-Updated 8/10/2025 12:25:57 PM
-Updated 8/10/2025 12:25:32 PM
-Updated 8/10/2025 11:49:25 AM
-Updated 8/9/2025 2:58:45 PM
-Updated 8/9/2025 2:58:29 PM