2012
10
Aug
ராட்சத கிரேன் விழுந்து ஊழியர் பலி மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் திடீர் நிறுத்தம்


சென்னை: ராட்சத கிரேன் விழுந்து தொழிலாளி பலியானதன் எதிரொலியாக மெட்ரோ ரயில் சுரங்க பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரி எதிரே மெட்ரோ ரயில் பணிக்காக சுரங்கம் தோண்டப்படுகிறது. இங்கு 75 அடி ஆழத்திற்கு சுற்றிலும் கான்கிரீட் சுவர் அமைப்பதற்காக 25 டன் இரும்பு கம்பிகளை ராட்சத கிரேன் உதவியுடன் இறக்கும் பணி கடந்த 8ம் தேதி இரவு நடந்தது. அப்போது திடீரென கிரேன் முறிந்து விழுந்தது. இதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிந்து (21) என்ற  தொழிலாளி உடல் நசுங்கி பலியானார். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.  இந்த விபத்தைத் தொடர்ந்து சுரங்கம் தோண்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுமார் 10 இடங்களில் சுரங்கம் தோண்டும் பணி நடக்கிறது. இந்த இடங்களில் எல்லாம் 50 முதல் 100 டன் வரையில் சுமைகளை கையாளக் கூடிய ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சுரங்கம் தோண்டும் பணியில் சர்வதேச அளவிலான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளது. இது தவிர சில பணிகளில்  சப்கான்ட்ராக்டர்களும் ஈடுபட்டுள்ளனர். மேலும், மெட்ரோ ரயில் பணிக்காக ஒடிசா, பீகார் மற்றும் மேற்கு வங்க மாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மெட்ரோ ரயில் பணியில் ஏற்பட்டுள்ள இந்த விபத்து தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொது ஆலோசகர் குழுத் தலைவர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.  ‘சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் முன் அனுபவம் உள்ளவர்களா? சப்கான்ட்ராக்டர்கள் தகுதியானவர்களா? ராட்சத கிரேன்கள் தொழில்நுட்ப வழிமுறைகளின்படி இயக்கப்படுகிறதா உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகே சுரங்கம் தோண்டும் பணி மீண்டும் தொடங்கும்’ என்று மெட்ரோ ரயில் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,