கோடிக்கணக்கில் மோசடி சுசி ஈமு நிறுவனம் மீது இதுவரை 478 பேர் புகார்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த சுசி ஈமு நிறுவனத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்துள்ளனர். கடந்த மாதத்துக்கான ஊக்கத்தொகை முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் கடந்த திங்கட்கிழமை சுசி ஈமு நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரத்தை சேர்ந்த முதலீட்டாளர் சின்னசாமி புகாரின் அடிப்படையில் போலீசார் சுசி ஈமு நிறுவன உரிமையாளர் குருசாமி, மேலாளர் கதிர்வேல் உள்ளிட்ட 8 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்களை பிடிக்க நான்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மூன்றாவது நாளாக ஏராளமான முதலீட்டாளர்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டனர். பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிடம் போலீசார் புகார் மனுக்களை பெற்றனர். இரவு வரை 478 பேர் புகார் அளித்தனர். 4வது நாளாக இன்றும் பலர் புகார் அளித்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையே பெருந்துறை போலீசில் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கு, ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதிதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுசி ஈமு நிறுவனத்திற்கு சொந்தமாக 100 ஏக்கர் நிலம் சத்தியமங்கலம் அடுத்துள்ள காளியூரில் உள்ளது. இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈமு கோழிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த 6 நாட்களாக தீவனம் வழங்கப்படாததால் ஈமு கோழிகள் இறந்து வருகின்றன. 2 நாளில் 200க்கும் அதிகமான ஈமு கோழிகள் இறந்துள்ளன.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/13/2012 3:48:44 PM
-Updated 8/13/2012 2:16:03 PM
-Updated 8/13/2012 2:15:36 PM
-Updated 8/12/2025 11:46:30 AM
-Updated 8/12/2025 11:36:59 AM
-Updated 8/12/2025 11:36:04 AM
-Updated 8/12/2025 11:32:57 AM
-Updated 8/11/2025 12:38:34 PM
-Updated 8/10/2025 2:46:39 PM
-Updated 8/10/2025 2:44:30 PM
-Updated 8/10/2025 2:38:44 PM
-Updated 8/10/2025 1:14:40 PM
-Updated 8/10/2025 1:13:55 PM
-Updated 8/10/2025 12:59:22 PM
-Updated 8/10/2025 12:25:57 PM