வெறும் 3 ரூபாய் தகராறில் சுங்க சாவடி ஊழியர் மீது பஸ் ஏற்றி படுகொலை: குஜராத்தில் பயங்கரம்
அகமதாபாத்: குஜராத்தில் 3 ரூபாய் கட்டணத்துக்காக சுங்க சாவடி ஊழியர் பஸ் ஏற்றி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரிங் ரோட்டில் சுங்க சாவடி உள்ளது. நேற்று முன்தினம் இரவு மயுர் பிரஜாபதி என்ற ஊழியர் பணியில் இருந்தார். 10 மணியளவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சொகுசு பஸ் ஒன்று வந்தது. அதன் டிரைவரிடம் ரூ.73ஐ கட்டணமாக கேட்டார் பிரஜாபதி. ரூ.70ஐ கொடுத்த பஸ் டிரைவர், 3 ரூபாய் இல்லை என கூறினார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத பிரஜாபதி, 3 ரூபாயை தரும்படி கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பஸ் டிரைவர் பஸ்சை கிளப்ப முயன்றார். இதை பார்த்த பிரஜாபதி, பஸ்சை நிறுத்துவதற்காக அதில் தாவி குதித்து ஏற முயன்றார். அப்போது பஸ்சில் இருந்த கண்டக்டர், பிரஜாபதியை எட்டி உதைத்து வெளியே தள்ளினார். இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். சுதாரித்து எழுவதற்குள் பஸ்சின் பின் சக்கரம் பிரஜாபதி மீது ஏறியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். பஸ் வேகமாக சென்று விட்டது. படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பிரஜாபதியை மற்ற ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது. இச்சம்பவம் தொடர்பாக சுங்க சாவடி ஊழியர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், டிரைவரை தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/12/2025 11:46:30 AM
-Updated 8/12/2025 11:36:59 AM
-Updated 8/12/2025 11:36:04 AM
-Updated 8/12/2025 11:32:57 AM
-Updated 8/11/2025 12:38:34 PM
-Updated 8/10/2025 2:46:39 PM
-Updated 8/10/2025 2:44:30 PM
-Updated 8/10/2025 2:38:44 PM
-Updated 8/10/2025 1:14:40 PM
-Updated 8/10/2025 1:13:55 PM
-Updated 8/10/2025 12:59:22 PM
-Updated 8/10/2025 12:25:57 PM
-Updated 8/10/2025 12:25:32 PM
-Updated 8/10/2025 11:49:25 AM
-Updated 8/9/2025 2:58:45 PM