2012
07
Aug
துறைமுக இணைப்பு சாலைக்கு நில ஆர்ஜிதம் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மீனவர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு


சென்னை: நில ஆர்ஜிதத்தை எதிர்த்த காசிமேடு மீனவர்களை பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடலோர மீனவர்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ஜெயகுமார், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், காசிமேடு பகுதியில் பல ஆண்டுகளாக மீன் வியாபாரம் செய்து வருகிறோம். திடீரென்று சென்னை துறைமுக சாலை விரிவாக்கத்திற்காக எங்கள் நிலங்களை ஆர்ஜிதம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளனர். இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே நில ஆர்ஜிதம் செய்யம் நடவடிக்கைக்கு தடை விதிக்கவேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி இக்பால் நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது தேசிய நெஞ்சாலைத் துறை சார்பாக மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, சென்னை துறைமுக சாலையை விரிவாக்கம் செய்ய நில ஆர்ஜிதம் செய்யப்படுகிறது. இது முக்கிய இணைப்பு சாலை. இது ரூ.600 கோடி செலவில் அமைக்கப்படுகிறது. எனவே நில ஆர்ஜித நடவடிக்கைக்கு தடை விதிக்க கூடாது. மீனவர்கள் 160 பேருக்கு மாற்று இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அங்கு செல்ல மறுக்கிறார்கள் என்றார். அப்போது துறைமுகம் சார்பாக மூத்த வக்கீல் முத்துகுமாரசாமி குறுக்கிட்டு, நாளை மீனவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடக்கிறது என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த பேச்சுவார்த்தையில் காசிமேடு மீனவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை இத்துடன் முடிப்பதாக அறிவித்தனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,