மின்கம்பத்தில் பள்ளி வேன் மோதி 2 மாணவர்கள் படுகாயம்: போதை டிரைவருக்கு அடி உதை
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பையில் தனியார் பள்ளி உள்ளது. நேற்று மாலை பள்ளி முடிந்ததும் 15க்கும் அதிகமான மாணவர்களை ஏற்றி கொண்டு செரப்பணஞ்சேரி வழியாக நாவலூருக்கு பள்ளி வேன் புறப்பட்டது. நாவலூர் சாலையில் வரும் போது டிரைவர் கட்டுப்பாட்டை மீறி சாலையில் தறிகெட்டு ஓடிய வேன் சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் மோதி அருகில் உள்ள கல்லூரி காம்பவுண்ட் சுவர் மீது மோதியது. இதில் வேனில் இருந்த 2 மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். பலத்த சத்தம் கேட்டு அந்த பகுதியினர் திரண்டனர். வேனில் இருந்த மாணவர்களை பத்திரமாக மீட்டனர். காயம் அடைந்தவர்களை படப்பை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்துக்கு காரணமான சென்னையை சேர்ந்த டிரைவர் திருவேங்கடத்தை கிராம மக்கள் பிடித்தனர். அப்போது அவர் போதையில் இருந்தாக கூறப்படுகிறது. டிரைவருக்கு தர்ம அடி கொடுத்து மணிமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். டிரைவர் திருவேங்கடத்தை ஸ்ரீபெரும்புதூர் ஆஸ்பத்திரிக்கு சோதனைக்கு கொண்டு சென்றனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/8/2025 3:41:12 PM
-Updated 8/8/2025 3:06:35 PM
-Updated 8/8/2025 2:51:39 PM
-Updated 8/8/2025 2:47:00 PM
-Updated 8/8/2025 2:46:42 PM
-Updated 8/8/2025 2:46:24 PM
-Updated 8/8/2025 2:45:09 PM
-Updated 8/8/2025 12:52:37 PM
-Updated 8/7/2025 4:05:15 PM
-Updated 8/7/2025 3:14:05 PM
-Updated 8/7/2025 3:09:24 PM
-Updated 8/6/2025 4:07:09 PM
-Updated 8/6/2025 3:44:07 PM
-Updated 8/6/2025 3:03:03 PM
-Updated 8/6/2025 1:50:19 PM