2012
07
Aug
கல்வி உதவித் தொகை வழங்குவதில் மோசடி சிபிசிஐடிக்கு மாற்ற தீவிரம்


நாமக்கல்: கல்வி உதவித்தொகை வழங்குவதில் நடந்த மோசடி  சம்பந்தமான  வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  இதன்மூலம் மேலும் பல தலைமை ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது. நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் நடந்த மோசடியில்  முதற்கட்டமாக 77 தலைமை ஆசிரியர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.  ஆதிதிராவிடர்நலத்துறை அலுவலர் ராமசந்திரன், கல்வி உதவித்தொகை தொடர்பான விண்ணப்பங்களை நேரில் சென்று தணிக்கை செய்யாமல் விண்ணப்பித்த அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். வங்கிக்கு சென்ற செக்கை திருத்த அத்துறை அலுவலர்கள் உடந்தையாக இருந்துள்ளார் போன்ற விபரங்கள் கலெக்டர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கலெக்டர் பரிந்துரைத்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர்நலத்துறையில் ஏற்கனவே கல்லூரி மாணவமாணவியருக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் பெரும் மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக அத்துறையில் பணியாற்றிய 8 அலுவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதே துறையில் மற்றொரு மோசடி நடந்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010, 2011 ம்ஆண்டுகளில் துப்புரவுதொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகையில் ரூ. 68 லட்சம் மோசடி நடந்துள்ளதால் அதற்கு முந்தைய ஆண்டுகளிலும் இது போன்ற மோசடி நடந்திருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உதவித்தொகை மோசடி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற மாவட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மேலும் பல தலைமை ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் சிக்குவார்கள் என தெரிகிறது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க
balasubramanaian - nanganallur
8/7/2025 -- 17:25:6

கல்வித்துறை அதிகாரிகளே இப்படி seiyalama

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Tamil Cinema movies, Tamil Movie News, Tamil Cinema News, Gossip, Cinema Review, Kollywood News, Bollywood News, Hollywood News, Tamil Movie Stills, Shooting Spot, Audio Release, Actress gallery, Actor Gallery, Glamour
 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,