அதிமுக நிர்வாகிக்கு வெட்டு : 5 பேர் கும்பலுக்கு வலை
சென்னை: அதிமுக நிர்வாகியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சைதாப்பேட்டை சின்னமலையை சேர்ந்தவர் பார்த்தசாரதி என்ற சைதை சாரதி(52). அதிமுகவில் எம்ஜிஆர் மன்ற நிர்வாகியாக உள்ளார். நேற்றிரவு திருவல்லிக்கேணி ஜிபி சாலை அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவரை வழிமறித்தனர். சாரதி தப்பி ஓட முயன்றார். அவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதைப் பார்த்து அப்பகுதியினர் ஓடிவந்தனர். சுதாரித்து கொண்ட ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பியது. தனியார் மருத்துவமனையில் சாரதி சேர்க்கப்பட்டார். சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குபதிந்து தப்பி ஓடிய கும்பலை தேடி வருகின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 8/8/2025 3:41:12 PM
-Updated 8/8/2025 3:06:35 PM
-Updated 8/8/2025 2:51:39 PM
-Updated 8/8/2025 2:47:00 PM
-Updated 8/8/2025 2:46:42 PM
-Updated 8/8/2025 2:46:24 PM
-Updated 8/8/2025 2:45:09 PM
-Updated 8/8/2025 12:52:37 PM
-Updated 8/7/2025 4:05:15 PM
-Updated 8/7/2025 3:14:24 PM
-Updated 8/7/2025 3:14:05 PM
-Updated 8/7/2025 3:09:24 PM
-Updated 8/6/2025 3:44:07 PM
-Updated 8/6/2025 3:03:03 PM
-Updated 8/6/2025 1:50:19 PM