காஷ்மீரில் பயங்கர விபத்து அமர்நாத் பக்தர்கள் 16 பேர் சாவு
ஜம்மு: காஷ்மீரில் பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததில் அமர்நாத் பக்தர்கள் 16 பேர் பலியாயினர். 16 பேர் படுகாயம் அடைந்தனர். காஷ்மீரில் இமயமலையில் அமைந்துள்ள அமர்நாத் குகை கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று பனி லிங்க தரிசனத்தை முடித்த பக்தர்கள் 34 பேர் ஒரு லாரியில் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். நேற்றிரவு 11.30 மணியளவில் சம்பா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் இருந்த பெரிய பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக லாரி கவிழ்ந்து உருண்டது. இந்த பயங்கர விபத்தில் 9 பேர் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே இறந்தனர். 23 பேர் படுகாயம் அடைந்தனர். 2 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும் தீயணைப்பு துறையினரும் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மேலும் 7 பேர் உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜம்மு பகுதியில் அமர்நாத் பக்தர்கள் விபத்தில் பலியாவது இந்த மாதத்தில் இது 2வது முறை. கடந்த 14ம் தேதி ராம்பன் நகர் அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 15 பக்தர்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 7/27/2012 12:58:41 PM
-Updated 7/27/2012 12:58:24 PM
-Updated 7/27/2012 12:42:17 PM
-Updated 7/27/2012 12:08:12 PM
-Updated 7/27/2012 12:04:32 PM
-Updated 7/26/2012 3:58:17 PM
-Updated 7/26/2012 3:57:43 PM
-Updated 7/26/2012 3:57:20 PM
-Updated 7/26/2012 3:47:54 PM
-Updated 7/26/2012 2:51:48 PM
-Updated 7/25/2012 3:19:38 PM
-Updated 7/25/2012 3:19:19 PM
-Updated 7/25/2012 3:18:28 PM
-Updated 7/25/2012 3:18:07 PM
-Updated 7/25/2012 3:17:46 PM